உகரம்
(இரண்டாம் பருவம்)
‘மை’ என முடியும்படி மூன்று சொல்கொண்ட தொடர் உருவாக்குக.
நாட்டுக்குத் தேவை வளமை நம்மை உயர்த்துவது வாய்மை பேச்சில் வேண்டும் இனிமை _______________________ _______________________ _______________________கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு, உரைப்பகுதி உருவாக்குக.
எ.கா.
பள்ளி – வகுப்பறை – உணவு இடைவேளை – தமிழ்நாடன் – இனியா – உணவு – மறந்துவிட்டாள் – பகிர்ந்து உண்டனர்.
தமிழ்நாடனும் இனியாவும் எட்டாம் வகுப்பில் படிக்கின்றனர். நண்பகல் 12மணி ஒலித்ததும் அனைவரும் உணவு உண்ணத் தயாராகினர். இனியாவும் உணவு உண்ணத் தயாரானாள். ஆனால், உணவுப்பையைக் காணவில்லை. பள்ளிப்பேருந்து வந்தததைக் கண்டு, அதில் உடனே ஏறியதும் அப்போது, உணவுப்பையை எடுத்துவர மறந்ததும் அவளுக்கு நினைவில் வந்தது. இப்போது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த தமிழ்நாடன், இனியா உணவு உண்ணாமல் இருப்பதைக் கண்டான். அவள் உணவுப்பை எடுத்துவர மறந்துவிட்டாள் என்பதைக் கேட்டறிந்தான். அவன் இனியாவைப் பார்த்து, “அதனாலென்ன, என்னுடைய உணவை இருவரும் பங்கிட்டுச் சாப்பிடலாம்“ என்று கூறினான். இருவரும் உணவைப் பகிர்ந்து உண்டனர்.
மாலைநேரம் – சாலையோரம் – பெரிய மரம் – நாய்க்குட்டிகள் – பசியால் வாடின – மணி – அருகில் சென்றான் – பார்த்தான் – யோசித்தான் – அருகில் கடை – பால் வாங்கினான் – நாய்க்குட்டிகள் குடித்தன – மணியுடன் விளையாடின.
பல்வேறு நாடுகளின் பண்பாடு குறித்த புகைப்படத் தொகுப்பை உருவாக்குக.