உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அணையது உயர்வு

- (குறள் 595)

- திருவள்ளுவர்

(மாந்தர் – மக்கள்; உள்ளம் – மனம்)

பொருள்

நீர்ப்பூக்களது தண்டின் நீளம், அவை நின்ற நீரின் அளவிலேயே இருக்கும். அதுபோல, மக்களின் உயர்வு அவர்களது ஊக்கத்தின் அளவிலேயே இருக்கும்.

பழமொழி

சொல்வது எளிது; செய்வது அரிது.

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. பழந்தமிழ்
  2. அறிவியல் அறிஞர்
  3. தொல்காப்பியம்
  4. ஐம்பொறி
  5. பகுத்தறிவு

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. சிந்தனை
  2. ஐம்புலன்
  3. ஆற்றல்