உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
படைப்பாற்றல் வளர்ப்போம் & கட்டுரை எழுதுவோம் & செயல்திட்டம்

19.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

உரிய சொற்களைக் கொண்டு கவிதையை நிறைவு செய்க.

சிவந்த வானம் அழகு

சிரிக்கும் -------- அழகு

வீசும் --------- அழகு

வீட்டுப் ---------- அழகு

மலரும் --------- அழகு

மயிலின் --------- அழகு

19.11 கட்டுரை எழுதுவோம்

கீழ்க்காணும் படக்காட்சிகளையும் குறிப்புச்சொற்களையும் கொண்டு, உரைப்பகுதி உருவாக்குக.

காடு – புறாக்கள் – வேடன் – பார்த்தல்
வேடன் – வலை – புறாக்கள்
வேடன் – பிடிக்க முயலுதல்
ஒற்றுமை – தப்புதல் – ஏமாற்றம்

19.12 செயல்திட்டம்

அண்டத்தின் (Galaxy) மாதிரியைச் செய்து வருக.