உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20
20.2 படிப்போம்

என் முதல் விண்வெளிப் பயணம்

என் பெயர் கல்பனா சாவ்லா. நான் இந்தியாவில் பிறந்தேன். வானூர்தித் துறையில் பொறியியல் பட்டம் பெற்றேன். விண்வெளி தொடர்பான ஆய்வுகளை நான் மிகவும் விரும்பினேன்.

அதனால், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் 1995இல் சேர்ந்தேன். ஈராண்டுக்குப்பின், கொலம்பியா விண்கலத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதுதான் என் முதல் விண்வெளிப் பயணம்.

இந்தப் பயணத்தின்போது விண்வெளியில் 372 மணி நேரம் இருந்ததை என் சாதனையாகக் கருதுகிறேன்.

இரண்டாவது முறையாகக் கொலம்பியா விண்கலம் ஏறி, மீண்டும் விண்வெளி சென்றேன். விண்வெளியில் 16 நாள் தங்கியிருந்து ஆய்வு செய்தேன். பூமிக்குத் திரும்பும்போது, எதிர்பாராத விதமாக விண்கலம் வெடித்ததால் உயிர் இழந்தேன்.

விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண்மணி என எல்லாரும் என்னைப் பாராட்டுகிறார்கள். நீங்களும் உங்கள் நாட்டைப் பெருமைப்படுத்துங்கள். சாதனைக்கு எதுவும் தடையில்லை. முயற்சியும் ஊக்கமும் இருந்தால், எல்லாருமே சாதிக்கலாம்.

பொருள் அறிவோம்

1. ஊர்தி - வாகனம்
2. சாதனை - அரிய செயல்
3. நிகழ்வு - நடைபெற்ற செயல்

கல்பனா சாவ்லா

பொறியியல் பட்டப் படிப்பில் வானூர்தித் துறையைத் தேர்ந்தெடுத்து படித்தார்.

கொலம்பியா விண்கலத்தில் சென்றதே தம் முதல் விண்வெளி நிகழ்வு எனக் கல்பனா சாவ்லா குறிப்பிடுகிறார்.

இரண்டாவது முறையாகக் கொலம்பியா விண்கலம் ஏறி, விண்வெளியில் 16 நாள் தங்கியிருந்து ஆய்வு செய்தது கல்பனா சாவ்லாவின் அரிய சாதனை ஆகும்.

நான் கணினித் துறையில் சாதிக்க விரும்புகிறேன்.