உகரம்
(இரண்டாம் பருவம்)
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினையெச்சம்.
(எ.கா.) எழுதி வந்தான்
இத்தொடரில் எழுதி என்னும் எச்சம், எழுதுதல் என்ற செயலையும் இறந்த காலத்தையும் வெளிப்படையாகக் காட்டுகிறது. எனவே, இது தெரிநிலை வினையெச்சம் ஆகும்.
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் குறிப்பால் பண்பை (குணத்தை) மட்டும் உணர்த்தி வருவது குறிப்பு வினையெச்சம்.
(எ.கா.) மெல்லப் பேசினாள்
‘மெல்ல’ என்னும் வினையெச்சம் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. ‘மெல்ல’ என்னும் பண்பு மட்டும் உணர்த்தப்படுவதால் இது குறிப்பு வினையெச்சம் எனப்படும்.