உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
21.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

- (குறள் 156)

- திருவள்ளுவர்

(ஒறுத்தார் – வருத்துபவர்; இன்பம் – மகிழ்ச்சி; பொறுத்தார் – பொறுத்துக்கொள்பவர்)

பொருள்

தீங்கு செய்தவர்களை வருத்துபவர்களுக்கு அன்று ஒருநாள் மட்டும் மகிழ்ச்சி கிடைக்கும். அதனைப் பொறுத்துக்கொள்பவர்களுக்கோ உலகம் அழியும்வரை புகழ் கிடைக்கும்.

பழமொழி

பொறுத்தார் பூமி ஆள்வார்

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. கையடக்கக் கருவி
  2. விளையாட்டுகள்
  3. பாராட்டுகள்
  4. விழியோடு விளையாடு
  5. செந்தமிழ்த் தேடல்

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. திறன்பேசி
  2. ஆர்வம்
  3. மென்பொருள்