உகரம்
(இரண்டாம் பருவம்)
தாமஸ் ஆல்வா எடிசன் வீட்டிற்கு நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் எடிசனைப் பார்த்து, ‘வீட்டின் வெளிப்புறத்தில் சுழல்கதவு உள்ளதே, அதனைச் சுற்றிக்கொண்டு உள்ளே வருவது கடினமாக உள்ளது’ என்றார். அதற்குத் தாமஸ் ஆல்வா எடிசன், ‘அது ஒன்றுமில்லை. உங்களுக்குக் கடினமாக இருப்பது, எனக்கு மிகப்பயனுடையதாக இருக்கிறது’ என்றார். ‘அதெப்படி’ என்று நண்பர் வியப்புடன் கேட்டார். அதற்கு எடிசன், ‘அந்தக் கதவுடன் ஒரு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கதவு ஒரு முறை சுற்றினால், அது எட்டு லிட்டர் தண்ணீரைத் தொட்டியில் நிரப்பும்’ என்றார்.
நண்பர்
தாமஸ் ஆல்வா எடிசனின் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள சுழல்கதவைச் சுற்றிக்கொண்டு உள்ளே வரவேண்டும்.
நண்பர் சுழல் கதவைச் சுற்ற கடினமாக இருக்கிறது என்றார். அதற்கு எடிசன் எனக்கு மிகப்பயனுடையதாக இருக்கிறது என்றார் இதைக் கேட்ட நண்பர் வியப்படைந்தார்.
சுழல் கதவுடன் இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது.
சுழல் கதவை ஒரு முறை சுற்றினால் அது எட்டு லிட்டர் தண்ணீரைத் தொட்டியில் நிரப்பும்.
ஒரு கடிதத்தை இவர்தாம் எழுதினார் என்பதை உறுதிப்படுத்த உதவுவது அவருடைய கையொப்பமாகும். அதுபோலவே கணிப்பொறி வழியே பெறப்படும் தகவலை இவர்தாம் அனுப்பினார் என்பதை உறுதிப்படுத்த உதவுவதே மின்னணு கையொப்பம் (Digital Signature) ஆகும். இதன் அடிப்படையிலேயே வங்கியில் இணையவழிப் (on-line) பணப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறவி வழங்கப்பட்டிருக்கும். அனைத்து வாடிக்கையாளர்களின் பொதுத்திறவியும் வங்கியிடம் இருக்கும்.