திருக்குறள்
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
- (குள் 293)
- திருவள்ளுவர்
(நெஞ்சு – மனம்; சுடும் – வருத்தும்)
பொருள்
ஒருவர் தம் மனம் அறிய பொய் கூறக்கூடாது. அவ்வாறு கூறினால், அவர் மனமே அவரை வருத்தும்.
பழமொழி
பாம்பின் கால் பாம்பறியும்
சொல்வதைக் கேட்டு எழுதுக
- சிறுவர்களுக்கான பாதுகாப்புச் செயலி.
- முகநூலில் பதிவேற்றம் செய்தல்.
- கடவுச்சொல்லைப் பகிர்தல் கூடாது
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக
- வங்கி கணக்கு எண்
- செல்பேசி
- மடிக்கணினி
- செயலி