உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
படைப்பாற்றல் வளர்ப்போம் & கட்டுரை எழுதுவோம் & செயல்திட்டம்

22.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழ்க்காணும் விடைகள் வருமாறு, ஐந்து விடுகதை உருவாக்குக.

  1. தண்ணீர்
    விடுகதை – அள்ள முடியும்; ஆனால், கிள்ள முடியாது. அது என்ன ?
  2. குடை
    விடுகதை – வெளியில் விரியும்; வீட்டில் சுருங்கும். அது என்ன ?
  3. உப்பு
    விடுகதை --------------------- அது என்ன ?
  4. குதிரை
    விடுகதை --------------------- அது என்ன ?
  5. மழை
    விடுகதை --------------------- அது என்ன ?
  6. சக்கரம்
    விடுகதை --------------------- அது என்ன ?
  7. புகை
    விடுகதை --------------------- அது என்ன ?

22.11 உயர்நிலைத்திறன்

கீழ்க்காணும் படக்காட்சிகளையும் குறிப்புச்சொற்களையும் கொண்டு, உரைப்பகுதி உருவாக்குக.

வாணி – மீனா – தோழிகள் – ஒரே வகுப்பு – கூடைப்பந்து – விளையாட்டில் ஆர்வம் – வாணியின் பெற்றோர் – ஊக்குவித்தல் – மீனாவின் பெற்றோர் – படிப்புக்கு இடையூறு – தடை செய்தல் – மீனா வருந்துதல் – பள்ளியில் விழா – பெற்றோர் கலந்து கொள்ளுதல் – படிப்பு, விளையாட்டு – இரண்டுமே தேவை – ஆசிரியர் வலியுறுத்தல் – உடல் வலிமை – விளையாட்டு மீனாவின் பெற்றோர் – புரிந்துகொள்ளல் – விளையாட அனுமதித்தல்.

22.12 செயல்திட்டம்

பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்தும் நிகழ்வு ஒன்றினைக் காணொலியாக உருவாக்குக.