உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 23
23.5 கேட்டல் கருத்தறிதல்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெண்கள் இருவர், குழந்தை ஒன்றைத் தூக்கிக்கொண்டு சாலமோன் மன்னனிடம் வந்தனர். அவர்கள் இருவருமே குழந்தை தங்களுடையது என வாதாடினர். மன்னர் சிறிதுநேரம் சிந்தித்தார். காவலனை அழைத்தார். உடனே, “வாளை எடுத்துக் குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாகக் கொடு” என்றார். அப்பொழுது ஒரு பெண், “உனக்கும் இல்லை எனக்கும் இல்லை. மன்னர் கூறியபடியே நடக்கட்டும்” என்றாள். “அப்படிச் செய்யாதீர்கள்! அவளே வளர்க்கட்டும்” என்று பதறினாள் மற்றொரு பெண். ‘’குழந்தைக்கு எந்தத் துன்பமும் வரக்கூடாது என்று நினைத்தவளே உண்மையான தாய்” எனத் தீர்ப்பு கூறினார் மன்னர். அவளிடமே குழந்தையைக் கொடுக்கச் செய்தார்.

வினாக்கள்

மன்னனிடம் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்த பெண்கள் இருவருமே குழந்தை என்னுடையது என்று வாதிட்டனர். எனவே குழந்தையை பெற்றுத்தருமாறு நீதிவேண்டி மன்னனைத் தேடி வந்தனர்.

மன்னன், காவலனிடம் “வாளை எடுத்துக் குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாகக் கொடு” என்றார்.

குழந்தையை வெட்ட வேண்டாம். அவளே வளர்க்கட்டும் என்று கூறினாள்.

“குழந்தைக்கு எந்தத் துன்பமும் வரக்கூடாது என்று நினைத்தவளே உண்மையான தாய்”. எனவே, குழந்தையை அவளிடம் ஒப்படைக்குமாறு மன்னன் கூறினார்.

சாலமோன்