உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
24.3 மொழிக்கூறு

உவமைத்தொடர்கள்

கவியரசன், பேச்சுப்போட்டியில் மடை திறந்த வெள்ளம்போலத் தங்கு தடையின்றிப் பேசினான்.
தம் மக்களின் உரிமைக்காகப் போராடி வெற்றி கண்ட வ.உ.சிதம்பரனார் புகழ் குன்றிலிட்ட விளக்குபோலப் பரவியது.
தோழி கற்றுக்கொடுத்த சதுரங்க விளையாட்டின் விதிமுறைகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் தெளிவாகப் புரிந்தது.
வெளிநாட்டில் வேலை செய்யும் குமரன், அத்தி பூத்தாற்போல எப்போதாவதுதான் தன் பெற்றோரைக் காண வருவான்.
சுற்றுலாவுக்குச் சென்ற இடத்தில், நண்பர்களைவிட்டுப் பிரிந்த மணிமாலா கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோலத் துன்பப்பட்டாள்.