உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
24.5 கேட்டல் கருத்தறிதல்

கடமைக்குச் செய்யாதே!

தருமன் என்பவர் மரக்கன்றுகள் நட நினைத்தார். அதற்கு, மூன்று பேரை வேலைக்கு நியமித்தார். மூவருக்கும் வேலையைப் பிரித்துக் கொடுத்தார். முதல் நபர் குழி தோண்ட வேண்டும். இரண்டாம் நபர் அந்தக் குழியில் மரக்கன்றை வைக்க வேண்டும். மூன்றாம் நபர் குழியில் மண்ணைத் தள்ளித் தண்ணீர் ஊற்ற வேண்டும். மூவரும் மறுநாளே வேலையைத் தொடங்கினர். அடுத்த நாள், இரண்டாம் நபர் வேலைக்கு வரவில்லை. ஆனாலும் வேலை தொடங்கியது. முதல் நபர் குழியைத் தோண்டினார். மூன்றாம் நபரோ தனக்குக் கொடுத்த வேலையைச் செய்யத் தொடங்கினார். இதனைக் கண்ட தருமன் அதிர்ச்சி அடைந்தார். அவர், மூன்றாம் நபரை அழைத்தார். ’மரக்கன்றே வைக்காமல் ஏன் குழியை மூடுகிறீர்’ என்று கேட்டார். ‘எனக்குக் குழியை மூடும் வேலையைத்தானே கொடுத்தீர்கள். அதைத்தான் நான் செய்கிறேன்’ என்றார். அதற்குத் தருமன், என்ன நோக்கத்திற்காக வேலை செய்கிறோம் என்பதை அறியாமல், கடமைக்கு வேலை செய்யக்கூடாது என்றார். மூன்றாம் நபர் தன் தவற்றை உணர்ந்து கொண்டார்.தருமன் என்பவர் மரக்கன்றுகள் நட நினைத்தார். அதற்கு, மூன்று பேரை வேலைக்கு நியமித்தார். மூவருக்கும் வேலையைப் பிரித்துக் கொடுத்தார். முதல் நபர் குழி தோண்ட வேண்டும். இரண்டாம் நபர் அந்தக் குழியில் மரக்கன்றை வைக்க வேண்டும். மூன்றாம் நபர் குழியில் மண்ணைத் தள்ளித் தண்ணீர் ஊற்ற வேண்டும். மூவரும் மறுநாளே வேலையைத் தொடங்கினர். அடுத்த நாள், இரண்டாம் நபர் வேலைக்கு வரவில்லை. ஆனாலும் வேலை தொடங்கியது. முதல் நபர் குழியைத் தோண்டினார். மூன்றாம் நபரோ தனக்குக் கொடுத்த வேலையைச் செய்யத் தொடங்கினார். இதனைக் கண்ட தருமன் அதிர்ச்சி அடைந்தார். அவர், மூன்றாம் நபரை அழைத்தார். ’மரக்கன்றே வைக்காமல் ஏன் குழியை மூடுகிறீர்’ என்று கேட்டார். ‘எனக்குக் குழியை மூடும் வேலையைத்தானே கொடுத்தீர்கள். அதைத்தான் நான் செய்கிறேன்’ என்றார். அதற்குத் தருமன், என்ன நோக்கத்திற்காக வேலை செய்கிறோம் என்பதை அறியாமல், கடமைக்கு வேலை செய்யக்கூடாது என்றார். மூன்றாம் நபர் தன் தவற்றை உணர்ந்து கொண்டார்.

வினாக்கள்

தருமன்

3

தோண்டிய குழியில் மரக்கன்றை வைக்கும் வேலை இரண்டாம் நபருக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

தவறு. கொடுத்த வேலையை எதற்காகச் செய்கிறோம் என்பதை அறியாமல் கடமைக்கு செய்தது.

இக்கதையின் மூலம் கடமைக்கு வேலை செய்யக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன்

சுவைச்செய்தி

சத்தியாகிரகம் என்பது, சத்யம் + ஆகிரகம் (சத்ய + ஆக்ரஹ) என்னும் இருசொல்லின் இணைப்பாகும். சத்யம் என்பது உண்மை, ஆகிரகம் என்பது உறுதியுடன் நிற்பது. உண்மையில் உறுதியாக நிற்பது என்பது இதன் பொருள். அண்ணல் காந்தியடிகள் இந்திய விடுதலைக்காகச் சத்தியாகிரக நெறியைப் பின்பற்றினார். வன்முறை இன்றி அமைதியாகத் தம் எதிர்ப்பைக் காட்டுவதே அகிம்சை. அவ்வழியில் இறுதிவரை போராடி, நாட்டிற்கு விடுதலையும் பெற்றுத் தந்தார்.
காந்தியடிகள்
(1869 – 1948)