உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
24.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்

- (குறள் 722)

- திருவள்ளுவர்

(கற்றாருள் – கற்றவர்களுள்; செல – உணரும் படி)

பொருள்

கற்றவர்களுள் கற்றவர் எனப் புகழப்படுகின்றவர், கற்றவர் அவையின்முன் தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு சொல்லக்கூடியவர் ஆவார்.

பழமொழி

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. காந்தியக் கொள்கை
  2. அறவழிப் போராட்டம்
  3. பெற்றோரின் அறிவுரை

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. அடக்கம்
  2. அமைதி
  3. வீரம்
  4. உயர்வு