உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - உரையாடலைப் பொருத்தமான உவமைத்தொடர்களால் நிறைவு செய்க

 
அல்லி : அடடே! வா குயிலி. இப்போதுதான் எங்கள் வீட்டிற்கு வழி தெரிந்ததா?
குயிலி : ஏன் அப்படிக் கூறுகிறாய்?
அல்லி : ஆமாம். நீ  அத்தி பூத்தாற்போல எப்போதாவதுதானே என்னைப் பார்க்க வருவாய்.
     
அப்பா : மோகன், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்திருக்கிறாய். மிகச் சிறப்பு. எப்படி உன்னால் முடிந்தது?
மோகன் : தமிழாசிரியர் கற்றுக்கொடுத்த பாடம்   உள்ளங்கை நெல்லிக்கனிபோல மிகத்தெளிவாகப் புரிந்தது அப்பா. அதனால்தான் நூறு மதிப்பெண் எடுக்கமுடிந்தது.