உகரம்
(இரண்டாம் பருவம்)
தொடர்களில் திணை, பால், இடம், காலம், மரபு ஆகியவற்றில் பிழை இருப்பது ‘வழுநிலை’. பிழை நீக்கி எழுதுவது ‘வழாநிலை’.
![]() |
![]() |
|
| அப்பா வந்தது | நிலா சிரித்தான் | |
![]() |
![]() |
|
| அவள் நடந்தேன் | கமல் நேற்று வருவேன் என்றான் | |
![]() |
||
| நாய் கத்துகிறது | ||
| குழலி | : | இனியா! அங்கே தெரியும் படங்களின் கீழுள்ள தொடர்களைப் பார். ஏதோ பிழை இருப்பது போலத் தெரிகிறதல்லவா? | |
| இனியா | : | ஏதோ இல்லை குழலி. அனைத்துத் தொடர்களுமே பிழையாக உள்ளன. | |
| குழலி | : | அப்படியா? முதலில் உள்ள படத்தில் அப்பா வந்தது என உள்ளது. | |
| இனியா | : | அதிலுள்ளது திணை வழு. அப்பா வந்தார் என்பதே சரியானது. | |
| குழலி | : | இனியா! இரண்டாம் தொடர் எப்படி வரவேண்டும் என எனக்குத் தெரியும். நிலா சிரித்தான் என்பது, நிலா சிரித்தாள் என வரவேண்டும். ஆனால் அது என்ன பிழை? | |
| இனியா | : | பெண்பாலுக்கு ஆண்பால் வினைமுற்று இடம்பெற்றுள்ளது. அது பால் வழு குழலி. மூன்றாம் தொடர் அவள் நடந்தேன் என உள்ளதைப் பார். | |
| குழலி | : | ஆம். அதை …. | |
| இனியா | : | அவள் நடந்தாள் எனக் கூறவேண்டும். அதனை இடவழு என்பர். | |
| குழலி | : | நான்காம் தொடரான கமல் நேற்று வருவேன் என்றான் என்பதை, கமல் நேற்று வந்தேன் என்றான் என்று கூறியிருக்க வேண்டுமல்லவா? | |
| இனியா | : | ஆம். மிகச் சரியாகச் சொன்னாய் குழலி. அத்தொடரில் இடம்பெற்றிருப்பது கால வழு என்பர். இறுதித் தொடர் …. | |
| குழலி | : | நாய் கத்தியது என்பது சரிதானே? அதில் என்ன பிழை? | |
| இனியா | : | நாய் கத்தாது குழலி. அது மரபு வழு. நாய் குரைக்கும் என்பதே சரியானது. |