உகரம்
(இரண்டாம் பருவம்)
உண்ணுவோமே – நன்றாய்
உண்ணுவோமே.
வெண்ணெயோடே – அப்பம்
விருப்பமோடே – நாம் உண்ணுவோமே
பழங்களோடே பாலும்
பகிர்ந்து கொள்வோம்.
கிழங்கினோடே – இனிய
கீரை உண்போம்.
விழுங்க வேண்டா – உணவை
மெல்ல வேண்டும்.
- ம.இலெ.தங்கப்பா
நொறுங்கத் தின்றால் நூறு வயது.