உகரம்
(இரண்டாம் பருவம்)
ஒரு தொடரை மாற்றி எழுதினாலும் அதன் கருத்து மாறாது.
| நான் உடற்பயிற்சி செய்ததால், என் உடல் வலிமை பெற்றது. | ![]() |
என் உடல் வலிமை பெற்றதற்குக் காரணம் உடற்பயிற்சி. |
| கண்ணன் திட்டமிட்டுச் செய்ததால் குறித்த நேரத்தில் பணியை முடித்தான். | ![]() |
கண்ணன் குறித்த நேரத்தில் பணியை முடிப்பதற்காகத் திட்டமிட்டான். |
| ஆசிரியர் மாணவருக்குப் பரிசளித்தார். | ![]() |
மாணவர் ஆசிரியரிடமிருந்து பரிசு பெற்றார். |
| எனக்கு உடல்நலம் சரியில்லாததால் பள்ளிக்குச் செல்லவில்லை. | ![]() |
நான் பள்ளிக்குச் செல்லவில்லை ஏனெனில் எனக்கு உடல்நலம் சரியில்லை. |
| ஒரு மதிப்பெண் வினாவிற்கு அதிகநேரம் எடுத்துக்கொண்ட மான்விழி, கட்டுரை வினாவிற்கு விடையளிக்கவில்லை. | ![]() |
மான்விழி ஒரு மதிப்பெண் வினாவிற்குக் குறைந்த நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தால், கட்டுரை வினாவிற்கு விடையளித்திருப்பாள். |