உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
26.5 கேட்டல் கருத்தறிதல்

நேர்மை

வணிகன் ஒருவன், பொருள்களையெல்லாம் சந்தையில் விற்றுப் பெரும்பணத்துடன் ஊர் திரும்பினான். வழியில் ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டான். பின்னர், வீட்டிற்குச் சென்றான். பணத்தைப் பெட்டியில் வைக்க எண்ணினான். ஆனால், பணப்பைபையைக் காணவில்லை தான் ஓய்வெடுத்த இடத்தில் தொலைத்துவிட்டதாகக் கருதினான். உடனடியாக அந்த இடத்தை நோக்கிச் சென்றான். ஆனால், அங்குப் பணப்பை இல்லை. அந்த வணிகன் விட்டுச்சென்ற பணப்பையை ஆசிரியர் ஒருவர் கண்டெடுத்தார். அதைத் தம் வீட்டிற்குக் கொண்டுசென்றார். வீட்டு வாசலின்முன்பு, ஒரு பலகையைக் கட்டி அதில், பணப்பையைத் தொலைத்தவர்கள் இங்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என எழுதிவைத்தார். செய்தியறிந்த வணிகன், அந்த வீட்டுக்குச் சென்றான். வீட்டுக்காரரின் நல்ல பண்பைப் பாராட்டி, அந்தப்பணத்தில் பாதியைக் கொடுக்க முன்வந்தான். ஆனால், அந்த ஆசிரியர் வாங்க மறுத்துவிட்டார்.. உடனே அந்த வணிகன் என் மனநிறைவுக்காக வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறி, அப்பணத்தை அவர் வீட்டிலேயே வைத்துவிட்டு உடனே விரைந்து சென்றான். ஆனால், திருடன், திருடன் அவனைப் பிடியுங்கள் என்று கத்திக்கொண்டே அந்த ஆசிரியர் ஓடிவந்தார். அங்கிருந்தவர்கள், அந்த வணிகனைப் பிடித்துக்கொண்டார்கள். அவன் என்ன திருடினான் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அந்த ஆசிரியர், என்னுடைய நேர்மையையும் இதுவரை நான் காப்பாற்றி வந்த மதிப்பையும் திருடிக் கொண்டான் என்று நடந்ததை விவரமாகக் கூறினார்.

வினாக்கள்

சந்தைக்கு

வணிகன் ஓய்வெடுத்துவிட்டு வீடு திரும்பும்போது வழியில் பணப்பை காணாமல் போனது.

பணப்பையைக் கண்டெடுத்த ஆசிரியர், தன் வீட்டு வாசலின்முன்பு, ஒரு பலகையைக் கட்டி, அதில் பணப்பையைத் தொலைத்தவர்கள் இங்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என எழுதிவைத்தார்.

வணிகனை

நேர்மை மற்றும் மதிப்பு