உகரம்
(இரண்டாம் பருவம்)
செயற்கரிய செயல் செய்து மக்கள்நலனில் அக்கறை கொண்டவர்களே உலக வரலாற்றில் இடம்பெறுகின்றனர். அவர்களுள் ஒருவர்தான் அயோத்திதாசர். இவர், தம் வாழ்நாள் முழுவதும் சமுதாய நலனுக்காகப் பாடுபட்டார். இவரைத் ‘தென்னிந்தியச் சமூகத்தின் சீர்திருத்தச் செம்மல்’ என மக்கள் அழைத்தனர்.
அயோத்திதாசரின் இயற்பெயர் காத்தவராயன். இவர், அயோத்திதாசர் என்பாரிடம் கல்வி கற்றார். தம் ஆசிரியர்மீது கொண்ட அன்பினால் தம் பெயரை அயோத்திதாசர் என மாற்றிக் கொண்டார்.
அயோத்திதாசர், உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டார். அவர்கள் முன்னேறுவதற்குக் கல்வியும் பொருளாதாரமும் அடிப்படையானவை என உணர்ந்தார். அதனால், சென்னையில் ‘ஆல்காட் பஞ்சமர்’ என்னும் பெயரில் பள்ளிகளை நிறுவ காரணமாக இருந்தார். அப்பள்ளிகளில் இலவசமாகக் கல்வி கற்றுத்தரப்பட்டது. கல்வி உதவித்தொகை, கற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் போராடிப் பெற்றுத் தந்தார்.
‘ஒரு பைசாத் தமிழன்’ என்னும் வார இதழைத் தொடங்கினார். பிறகு அது ‘தமிழன்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. தம்முடைய சீர்திருத்தக் கருத்துகளைத் தம் இதழில் செய்திகளாக வெளியிட்டார். இவ்விதழ் வாரந்தோறும் புதன்கிழமை வெளியாகியது.
சமூகப் பணியுடன் தமிழ்ப்பணியும் மேற்கொண்டார். இவர், சிறந்த தமிழறிஞர், சித்த மருத்துவர், சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவாளர், பன்மொழிப் புலமையாளர்; இதழாசிரியர், படைப்பாளர், அரசியல் சிந்தனையாளர் எனப் பன்முகம் கொண்ட ஆளுமையாக விளங்கினார்.
| 1. | சமுதாயம் | - | மக்களின் தொகுப்பு | ||
| 2. | செம்மல் | - | பெருமைக்குரியவர் | ||
| 3. | செயற்கரிய | - | செய்வதற்கு அரிய |
அயோத்திதாசர்
காத்தவராயன்
அயோத்திதாசர், தன் ஆசிரியர் மீது கொண்ட அன்பினால் தம் பெயரை அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டார்.
அயோத்திதாசர், உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டார்.
உரிமை மறுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குக் கல்வியும் பொருளாதாரமும் அடிப்படையானவை என உணர்ந்ததனால், அவர்களுக்கு சென்னையில் ‘ஆல்காட் பஞ்சமர்’ என்ற பெயரில் பள்ளிகளைத் தொடங்கினார்.