உகரம்
(இரண்டாம் பருவம்)
| வ.எண் | பிழையான தொடர்கள் | பிழையற்ற தொடர்கள் |
| 1. | நானும் அன்பரசியும் சுற்றுலா சென்றேன். | நானும் அன்பரசியும் சுற்றுலா சென்றோம். |
| 2. | எங்கள் வீட்டிற்கு நேற்று உறவினர் வந்திருக்கிறார். | எங்கள் வீட்டிற்கு நேற்று உறவினர் வந்தார். |
| 3. | கண்மணி மாலை தொடுத்தான். | கண்மணி மாலை தொடுத்தாள். |
| 4. | நான் ஒரு புதிய எழுதுகோல் ஒன்று வாங்கினான். | நான் புதிய எழுதுகோல் ஒன்று வாங்கினேன். |
| 6. | கண்ணன் வரைந்த ஓவியம் இதுவல்ல. | கண்ணன் வரைந்த ஓவியம் இதுவன்று. |
| 7. | செல்வி, நில், நானும் வந்தேன். | செல்வி, நில், நானும் வருகிறேன். |
| 8. | ஒருவர் எப்படிப் பேசுகிறாரோ அவ்வாறேவாழ்ந்துகாட்ட வேண்டும். | ஒருவர் எப்படிப் பேசுகிறாரோ அப்படியேவாழ்ந்துகாட்ட வேண்டும். |
| 9. | ஒரு ஆலமரத்தில் ஓர் கிளியைக் கண்டேன். | ஓர் ஆலமரத்தில் ஒரு கிளியைக் கண்டேன். |
| 10. | கந்தன் தான் செய்த தவறை எண்ணி வருந்தினான். | கந்தன் தான் செய்த தவற்றை எண்ணி வருந்தினான். |
| 11. | அழகுமயில் தோகை விரித்து ஆடின. | அழகுமயில் தோகை விரித்து ஆடியது. |
| 12. | திருக்குறள் இல்லங்கள்தோறும் இருக்கவேண்டிய ஓர் அறநூலாகும். | திருக்குறள் இல்லந்தோறும் இருக்கவேண்டிய ஓர் அறநூலாகும். |
| 13. | பழமொழி நானூறு என்னும் நூலில் ஒவ்வொரு பாடல்களிலும் ஒரு பழமொழி இருக்கும். | பழமொழி நானூறு என்னும் நூலில் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இருக்கும். |