உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.5 கேட்டல் கருத்தறிதல்

சிந்தித்துச் செயல்படு

மாணிக்கம், தம் நிலத்தில் தென்னங்கன்றுகளை நட முடிவு செய்தார். அந்த வேலையை கபிலன் என்பவரிடம் ஒப்படைத்தார். ஒரு குழியைத் தோண்டி, அதில் தென்னங்கன்று நடுவதற்கு `500 தருவதாகக் கூறினார். கபிலன் முதல்நாளில் இருபது குழியைத் தோண்டி 20 தென்னங்கன்று நட்டார். இரண்டாம் நாள் 15; மூன்றாம் நாள் 10; நான்காம் நாள் 5; இவ்வாறு குழிதோண்டும் எண்ணிக்கையும், தென்னங்கன்று நடும் எண்ணிக்கையும் நாள்தோறும் குறைந்துகொண்டே வந்தது. இறுதியில் குழி தோண்டவே முடியவில்லை. ஏன் ? ஏனெனில் - மண்வெட்டியின் முனை மழுங்கிவிட்டது.

வினாக்கள்

மாணிக்கம், தம் நிலத்தில் தென்னங்கன்றுகனை நட முடிவு செய்தார்.

மாணிக்கம் வேலையை கபிலன் என்பவரிடம் ஒப்படைத்தார்

முதல் நாள் கபிலன் 20 தென்னங்கன்று நட்டார்.

ஒரு தென்னங்கன்று நடுவதற்கு கூலியாக ரூ.500 கொடுக்கப்பட்டது

மண்வெட்டியின் முனை மழுங்கிவிட்டது. எனவே கபிலனால் குழி தோண்ட முடியவில்லை.

சுவைச்செய்தி

தமிழ்மீது பற்றுக்கொண்ட எல்லீஸ் ஃபிரான்சிஸ் என்பவர், தமிழ் இலக்கியச் சுவடிகளைத் திரட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது ஆர்வத்தை அறிந்துகொண்ட கந்தசாமி என்பவர், தம்மிடமிருந்த சில நூல்களின் ஓலைச்சுவடிகளை அவரிடம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக்கொண்ட எல்லீஸ் ஃபிரான்சிஸ் அந்த ஓலைச்சுவடிகளில் இருந்த செய்திகளைக் கந்தசாமியிடம் கேட்டறிந்தார். அவற்றைத் தொகுத்து 1812இல் அச்சிட்டு நூலாக வெளியிட்டார். அதுதான் உலகம் போற்றும் பொதுமறையாம் திருக்குறள். அவருக்கு ஓலைச்சுவடி தந்து உதவிய கந்தசாமி என்பவர், அயோத்திதாசரின் பாட்டனார் ஆவார்.