உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்

- (குறள் 997)

- திருவள்ளுவர்

அரம் – கூர்மையான கருவி, போல்வர் – போன்றவர்

பொருள்:

மக்களுக்குரிய பண்பு இல்லாதவர், அரம்போலக் கூர்மையான அறிவைப் பெற்றிருந்தாலும் ஓரறிவு உயிராகிய மரத்துக்கு ஒப்பாவர்.

பழமொழி

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. சீர்திருத்தச் செம்மல்
  2. உயர்ந்த எண்ணம்
  3. பன்மொழிப் புலவர்
  4. பொருளாதாரம்
  5. பகுத்தறிவாளர்

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. ஆசிரியர்
  2. அன்பு
  3. முன்னேற்றம்
  4. வார இதழ்