உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

27.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழ்க்காணும் இணைப்புச்சொற்களுள் பொருத்தமானவற்றைக் கொண்டு உரையாடல் ஒன்று உருவாக்குக.

ஆனால்/ ஆகையால்/ அதனால்/ அப்படியெனில்/ எனவே/ ஆகவே/ ஆதலால்/ ஏனெனில்/ அல்லது/ ஆயினும்/ ஆனாலும்/ இருப்பினும்

நகுல் : முகிலா, நேற்று ஏன் விளையாட வரவில்லை?
முகில் : ஏனெனில், என் வீட்டிற்கு உறவினர் வந்திருந்தனர்.
நகுல் : அடுத்த வாரம் நமக்கு அரைஇறுதிப்போட்டி உள்ளது. மறந்துவிட்டாயா?
முகில் : மறக்கவில்லை, நகுல். ஆனாலும் இன்றும் என்னால் விளையாட முடியாது.
நகுல் : என்ன இப்படிச் சொல்கிறாய்? நீ சிறப்பாக விளையாடுகிறாய் என்று ஆசிரியர் கூறினாரே. ஆதலால், நீ கட்டாயம் வரவேண்டும்.
முகில் : -----------------------
நகுல் : -----------------------
முகில் : -----------------------
நகுல் : -----------------------
முகில் : -----------------------
நகுல் : -----------------------
முகில் : -----------------------
நகுல் : -----------------------
முகில் : -----------------------
நகுல் : -----------------------

27.11 உயர்நிலைத்திறன்

கீழ்க்காணும் படங்களுள் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்து அதற்குப் பொருத்தமான உரையாடல் எழுதுக.

27.12 செயல்திட்டம்

உனக்குப் பிடித்த சமூகச் சீர்திருத்தவாதி ஒருவரின் வாழ்வியல் நிகழ்வு ஒன்றனைக் கணினி நழுவமாக (Power Point) உருவாக்குக.