உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
28.7 செந்தமிழ்ச்செல்வம்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு!

உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்

ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்

தரணியில் அது புதுமை!

உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்

ஓடி மறைந்திடும் மடமை!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு!

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

(கள்ளம் - குற்றம் ; பேதம் – பாகுபாடு; தரணி – உலகம்; மடமை – அறியாமை)

பழமொழி

தனிமரம் தோப்பாகாது

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. பரிசு அறிவிக்கப்பட்டது
  2. கேள்வி கேளுங்கள்
  3. நல்லறிவு பெறட்டும்

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. இராணுவம்
  2. நண்பர்கள்
  3. விழிப்புணர்வு
  4. உத்தரவு