உகரம்
(இரண்டாம் பருவம்)
![]() |
ஆசிரியர் பாடம் நடத்தினார் ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார் ஆசிரியர் மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தினார் |
![]() |
நான் கடற்கரைக்குச் சென்றேன். நானும் அண்ணனும் கடற்கரைக்குச் சென்றோம். நானும் அண்ணனும் உறவினர்களோடு கடற்கரைக்குச் சென்றோம். |
![]() |
நான் கபடி விளையாடினேன். நானும் என் நண்பர்களும் கபடி விளையாடினோம். நானும் என் நண்பர்களும் இரு அணிகளாகக் கபடி விளையாடினோம். |
![]() |
நான் புத்தகம் படித்தேன். நான் கவிதைப் புத்தகம் படித்தேன். நான் நூலகம் சென்று கவிதைப் புத்தகம் படித்தேன். |
அன்னை தெரசா கொல்கத்தாவில் குழந்தைகள் காப்பகம் ஒன்றைத் தொடங்கினார். அதற்கு, ‘நிர்மலா சிசுபவன்’ என்று பெயரிட்டார். 1953ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் நாள் சிசுபவனுக்கு முதல் குழந்தை கொண்டு வரப்பட்டது. அன்றுமுதல் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளைச் சிசுபவன் காத்து வருகிறது. |
அன்னை தெரசா |