உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

- (குறள் 39)

- திருவள்ளுவர்

(அறம் – தருமம்: இன்பம் – மகிழ்ச்சி: இல – இல்லை)

பொருள்:

அறத்தோடு பொருந்திவரும் இன்பமே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாது வருவன எல்லாம் துன்பம் தருவன. அவை புகழும் இல்லாதன.

பழமொழி

அன்பே கடவுள்

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. அன்னை தெரசா
  2. சுகாதார அலுவலர்
  3. தன்னார்வலர்கள்

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. அமைதி
  2. ஊர்மக்கள்
  3. இடவசதி
  4. எதிர்ப்பு