ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.5 கேட்டல் கருத்தறிதல்

நேரம் தவறாமை

காந்தி அடிகள் வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் உணவு உண்பதற்கு இரண்டுமுறை அழைப்பு மணி ஒலிப்பது வழக்கம். அதற்குள், உணவுக்கூடத்துக்கு வந்துவிட வேண்டும். நேரம் கடந்து வருபவர்கள், உணவுக்கூடத்தின் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் காத்திருக்க வேண்டும். காந்தியடிகள், ஒருநாள் இரண்டாவது முறை மணியடித்துச் சிறிதுநேரம் கழித்தே வந்தார். எனவே, கதவுகளுக்குப்பின் காத்திருந்தார். இதைக் கவனித்த வேலையாள் ஓடிவந்து, “பாபுஜி, தயவுசெய்து உள்ளே வாருங்கள்!” என்றார். ஆனால், காந்தியடிகள் இதை ஏற்க மறுத்தார். “ஆசிரமத்தின் விதிமுறைகள் எல்லாருக்கும் பொருந்தும். எல்லாரையும் போல நானும் அவற்றைப் பின்பற்ற வேண்டும். இன்று எனக்காக விதிமுறைகளைத் தளர்த்தினால், நாளை மற்றவர்களுக்காகவும் தளர்த்த வேண்டியிருக்கும்!” என்று கூறி, பொறுமையுடன் காத்திருந்தார்.

வினாக்கள்

சபர்மதி

நேரம் கடந்து வந்த காந்திஜி பொறுமையாகக் கதவுகளுக்குப் பின் காத்திருந்தார்.

காந்திஜி, ஆசிரமத்தின் விதிமுறைகள் எல்லோருக்கும் பொருந்தும். எல்லாரையும் போல நானும் அவற்றைப் பின்பற்ற வேண்டும். இன்று எனக்காக விதிமுறைகளைத் தளர்த்தினால், நாளை மற்றவர்களுக்காவும் தளர்த்த வேண்டியிருக்கும் என்றார்.

காந்திஜி

நேரத்தைப் பின்பற்றாவிட்டால் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டும்.