ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

கீழ்க்காணும் விளம்பரத்தைப் பார்த்து வினாக்களுக்கு விடையளிக்க.

வினாக்கள்

பாரதியாருக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

மாபெரும் கவிதைப்போட்டி

கவிதைகள் எழுத்து வடிவிலோ அல்லது தட்டச்சு வடிவிலோ அமைய வேண்டும்.

01.12.2023

ரூ.15,000

சுவைச்செய்தி

புலவர் பலர் தமிழுக்குத் தொண்டாற்றி உள்ளனர். அவர்களுள் இரட்டையர் குறிப்பிடத்தக்கவர்கள். இரட்டையரில் ஒருவர் பார்வைத் திறன் அற்றவர். மற்றொருவர் நடக்கும் திறன் அற்றவர். இவர்கள் எப்பொழுதும் இணைந்தே செல்வர். பார்வைத் திறன் அற்றவர் நடக்கும் திறன் அற்றவரைத் தோளில் சுமந்து செல்வார். நடக்கும் திறன் அற்றவர் வழி காட்டுவார். இவர்கள் கலம்பகம், சிலேடை முதலிய இலக்கியங்களைப் பாடியுள்ளனர். ஒரு பாடலின் முதல் இரண்டு அடியை ஒருவர் பாட, அடுத்த இரண்டு அடியை மற்றொருவர் பாடி முடிப்பார்.
இரட்டைப் புலவர்கள்