கவிதை
உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில், உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை
- கவிமணி தேசிக விநாயகனார்
பொருள்
கவிதை என்பது உள்ளத்திலிருந்து வெளிப்படும். அதனைப் படிப்பவர்க்கு மகிழ்ச்சியைத் தரும். தெளிவான அழகிய தமிழில் உண்மையை எடுத்துரைப்பதாக அமையும்.
பழமொழி
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
சொல்வதைக் கேட்டு எழுதுக
- பாரதியார் பாடிய நூல்களுள் ஒன்று குயில்பாட்டு.
- பாரதியும், ஷெல்லியும் கவிதைமீது ஈடுபாடு கொண்டிருந்தனர்.
- அன்பினால் மட்டுமே தீமையை வெல்ல முடியும்.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக
- தோழர்
- நூல்கள்
- நற்பண்பாளர்
- விதிமுறைகள்