ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

2.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

ஒரே ஓசையில் முடியும்படி பின்வரும் சொற்களைக்கொண்டு தொடர்களை உருவாக்குக.

(பெருமை, எளிமை, நேர்மை, கடமை, உரிமை, உண்மை, நன்மை, மேன்மை, சிறுமை, தீமை)

எப்போதும் பேசிடுவோம் உண்மை

எல்லாருக்கும் தந்திடுமே அது பெருமை

நாட்டைக் காப்பது நம் கடமை

நாளும் பேணிக்காப்பது நம் உரிமை

___________________________________________________

___________________________________________________

2.11 உயர்நிலைத்திறன்

குறிப்புச் சொற்களைப் பயன்படுத்திச் சிறுகதை எழுதுக.

ஆடுகள் இரண்டு – குறுகிய பாலம் – செல்ல வழியில்லை – சண்டையிட்டன – முட்டி மோதின – நரி – நல்ல வேட்டை – ஆடுகளுக்கு இடையில் – நுழைதல் – ஆடுகள் மீண்டும் முட்டுதல் – நரி மாட்டிக்கொள்ளுதல்.

2.12 செயல்திட்டம்

உங்கள் வாழ்வில் நடந்த ஏதேனும் ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு பக்க அளவில் சிறுகதை ஒன்றை எழுதி வருக.