ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.5 கேட்டல் கருத்தறிதல்

இரக்கமுள்ள மனம்

தொடர்வண்டி ஐந்து மணிநேரம் தாமதம். இரவு ஏழு மணிக்கு ஊர் வந்து சேரவேண்டிய வண்டி, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குத்தான் வந்தது. களைப்பு ஒருபக்கம், எரிச்சல் மறுபக்கம். வீடு நாலு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. எப்படி வீட்டிற்குப் போவது என்று தவித்தான் சரவணன். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மாட்டுவண்டிக்காரர் ஒருவர் இருப்பதைப் பார்த்தான். அவரருகே சென்றான். தன் வீட்டு முகவரியைக் கூறி அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டான். சாலை கொஞ்சம் மேடுபள்ளமா இருக்கும். இருட்டு வேறே, பரவாயில்லையா தம்பி என்றார் வண்டிக்காரர். பரவாயில்ல, பரவாயில்ல, நான் விடிவதற்குள் வீட்டுக்குப் போகவேண்டும் என்று கூறினான் சரவணன். சரி, ஏறி உட்காருங்க தம்பி என்றவாறே மாடுகளைத் தட்டினார் அந்த வண்டிக்காரர். பாவம், இந்த வண்டிக்காரர், இரவு நேரம் என்று கூடப் பார்க்காம நமக்காக வண்டி ஓட்டுகிறார். கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுக்கலாம் என்று நினைத்துக்கொண்டான் சரவணன். வீட்டுக்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததும் அவன் மனம் மாறியது. வண்டிக்காரர் அவனது கடமையைத்தானே செய்தான். அதற்கெதற்கு அதிகமாகக் கொடுக்கவேண்டும் என்று எண்ணியவாறே, இந்தாப்பா, நூறு ரூபாய் என்று அவன் கையில் திணித்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்றான் சரவணன்.

வினாக்கள்

சரவணன்

ஐந்து மணி நேரம்

மாட்டுவண்டியில்

வண்டிக்காரர் இரவு நேரம் என்று கூடப் பார்க்காமல் வண்டி ஓட்டி வந்ததால் சரவணன் இரக்கப்பட்டான்.

இரக்கக்குணம் கொண்டவர் வண்டிக்காரர். அவர் சரவணனுக்கு உதவ வேண்டும் என்று இரக்கப்பட்டதால், நள்ளிரவு என்றும் பார்க்காமல் பாதுகாப்பாக மாட்டுவண்டியில் அழைத்துச் சென்றார்.

தகவல்துளி

ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு பிரிவு. உலக உணவுத் திட்டம் (World Food Programme). இது, உலக அளவில் மிகப்பெரிய மனிதநேய அமைப்பு. இதன் தலைமைச்செயலகம் ரோம் நகரில் உள்ளது. இந்த அமைப்பானது பட்டினியை எதிர்த்துப் போராடுதல், போர்க்காலங்களில் பசியால் வாடும் மக்களுக்கு உணவு வழங்குதல் போன்ற செயல்களை மேற்கொள்கிறது. இது ஒவ்வோர் ஆண்டும் 914 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்குகிறது. இச்செயல்களுக்காக இந்த அமைப்பிற்கு 2020ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.