ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்

- (குறள் : 575)

- திருவள்ளுவர்

(கண்ணோட்டம் – இரக்கம்)

பொருள்:

கண்ணிற்கு அணிகலம் என்று சொல்லப்படுவது இரக்கமே ஆகும். அவ்வாறு இரக்கம் இல்லாத கண், ‘புண்’ என்று கூறப்படும்.

பழமொழி

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. வறியவர்க்கு ஈதல் வேண்டும்.
  2. பிறர்க்கு உதவுதல் சிறந்த மனிதநேயம்.
  3. அன்பைவிடச் சிறந்த பண்பு இல்லை.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. உணவு
  2. உறவினர்
  3. ஓய்வு