ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
பயிற்சி - படங்களைப் பார்த்து வினையெச்சச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
 1. வள்ளி பழக்கூடையைச் சுமந்து வந்தாள்.
 2. கபிலன் ஓடி வந்தான்.
 3. மகிழ்நன் பார்க்காமல் எழுதினான்.
 4. குழலி பழத்தைக் கடித்துத் தின்றாள்.
 5. அம்மா குழந்தையைத் தூங்க வைத்தாள்.
 6. வேலன் வீட்டிற்கு நடந்து போனான்.
 7. இனியா மாடிப்படிக்கட்டில் ஏறிச் சென்றாள்.
 8. தேன்மலர் மேடையில் பேச தொடங்கினாள்.