ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.3 தெரிந்துகொள்வோம்

இணைமொழிகள்

ஓசைநயம் பற்றியும் பொருட் செறிவு உடையனவாகவும் அமைந்து இரு சொற்கள் இணைந்து வருமாயின் அது இணைமொழி எனப்படும். இது மூன்று வகைப்படும்.

 

ஒரு பொருளின் பண்பு அல்லது செயலைக் குறிப்பது, செறியிணை மொழி.

 

செறியிணை


செவ்வாழை செக்கச்செவேலெனச் சிவந்துள்ளது.

செறியிணை


வயல்கள் பச்சைப்பசேலெனக் காட்சியளித்தது.

செறியிணை


நெல் மூட்டைகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்தன.

நேரிணை

எதிரிணை

ஒரே பொருள் தரும் இரு சொல் இணைந்து வருவது நேரிணை மொழி.

ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு சொல் இணைந்து வருவது எதிரிணை மொழி.


தமிழரசன் தேர்வுக்காகக் கண்ணும்கருத்துமாய்ப் படித்தான்.

நம்பி, பூங்காவில் நாய்க்குட்டியைத் தேடி அங்கும்இங்கும் அலைந்தான்.

வயலில் பயிர்கள் நீரின்றி வாடிவதங்கிக் காய்கின்றன.

விளையாட்டுப் போட்டியில் வெற்றியும் தோல்வியும் ஏற்படுவது இயல்பானது.

கண்மணி தன் வீட்டிற்கு வந்த உற்றார் உறவினருடன் பேசி மகிழ்ந்தாள்.

இளமுருகன் இரவுபகல் பாராது ஓய்வின்றி உழைத்தான்.