ழகரம்
(முதல் பருவம்)
ஒரு வினை செயப்படுபொருளை ஏற்காமல் வருவது செயப்படுபொருள் குன்றிய வினை எனப்படும்.
எ.கா. மரம் விழுந்தது
இத்தொடரில் மரம் – எழுவாய் ; விழுந்தது – பயனிலை. செயப்படுபொருள் இல்லை. இவ்வாறு செயப்படுபொருளை ஏற்காத வினைகள் செயப்படுபொருள் குன்றிய வினை எனப்படும்.
விமானம் உயரே பறந்தது |
கவிதா விரைவாக ஓடினாள் |
நான் பள்ளிக்குச் சென்றேன் |
காற்று வேகமாக வீசியது |
![]() அவள்மெதுவாக ஓடினாள் |
|
ஒரு வினை செயப்படுபொருளை ஏற்று வருவது செயப்படுபொருள் குன்றா வினை எனப்படும்.
எ.கா. கண்ணன் சிற்பத்தைச் செதுக்கினான்.
இத்தொடரில் கண்ணன் – எழுவாய் ; சிற்பம் – செயப்படுபொருள்; செதுக்கினான் – பயனிலை. எதைச் செதுக்கினான் என்ற கேள்விக்கு விடையாகச் சிற்பம் என்று பொருள் தருவதால் இது செயப்படுபொருள் குன்றா வினை எனப்படும்.
மான்கள் தண்ணீர் குடித்தன |
ஆசிரியர் பாடம் நடத்தினார் |
வசந்தன் பந்து விளையாடினான் |
மகிழினி கோப்பையை வென்றாள் |
![]() வேலன் ஈட்டி எறிந்தான் |
|