ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் என்கேட்ட தாய்

- (குறள்-69)

- திருவள்ளுவர்

(ஈன்ற பொழுது – பெற்றெடுக்கும் பொழுது; உவக்கும் – மகிழும்; சான்றோன் – நற்பண்பு மிக்கவன்)

பொருள்:

தாய், தன் மகனை நற்பண்பு மிக்கவன் என மற்றவர் புகழும்போது, அவனைப் பெற்றெடுத்த பொழுதைவிட மிகவும் மகிழ்ச்சி பெறுவாள்.

பழமொழி

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

சொல்வதைக் கேட்டு எழுதுக

மனிதன் கூடி வாழும் இயல்புடையவன். தனிமரம் தோப்பாகாது என்பதை நன்கு உணர்ந்தவன், பிறரோடு இணக்கமாக வாழத் தெரிந்தவன். உறவுகளைப் பேணுவதில் மிகுந்த அக்கறை கொண்டவன்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. அன்பு
  2. உறவினர்
  3. திருவிழா