ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

5.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழ்க்காணும் கோடிட்ட இடங்களில் உம் கற்பனைக்கேற்பச் சொற்களை நிரப்புக.

எறும்பைப் போலச் சுறுசுறுப்பாக

நாம் இருக்கப் பழகுவோம்

யானை போலக் கூட்டமாக

நாம் வாழப் பழகுவோம்

புலியைப் போல ----------

----------------------

பசுவைப் போல ----------

----------------------

-------- போல ---------

----------------------

-------- போல ---------

----------------------

5.11 உயர்நிலைத்திறன்

கீழ்க்காணும் உரைப்பகுதியில் விடுபட்ட இடங்களில் பொருத்தமான சொற்களை நிரப்புக.

தை மாதம் முதல் நாள் -------- விழா கொண்டாடப்படுகிறது. இது தமிழர் திருநாள் எனவும் -------- திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்விழா, ---------- உயர்வை உணர்த்துகிறது. இயற்கையை வணங்கும் வகையில் ---------- பொங்கல் படைத்துக் கொண்டாடுவர். இரண்டாம் நாள் --------- பொங்கல். அன்று மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு -------- தீட்டுவர். மூன்றாம் நாள் காணும் பொங்கல். அன்று பெரியவர்களைக்கொண்டு அவர்களிடம் -------- பெறுவர்.

5.12 செயல்திட்டம்

உங்கள் குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாகக் கொண்டு, ‘என் இனிய உறவுகள்’ என்ற தலைப்பில் குறும்படம் உருவாக்குக.