சமூகப் பொறுப்பு
 |
 |
அம்மா, எனக்கு எழுதுபொருள் வேண்டும். |
| சரி, கமலி, வா, கடைக்குச் செல்வோம். |
 |
 |
அம்மா, அதோ பாருங்கள். பதாகைகளுடன் பலர் ஊர்வலமாக வருகின்றனர். |
| வா, அருகில் சென்று பார்ப்போம். |
 |
|
| இன்று உலக நீர் நாள். நீரை வீணாக்காமல் அதனைச் சேமிக்க வலியுறுத்தி, அவர்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர். நீரைச் சேமிப்பது சமூகப்பொறுப்புகளுள் ஒன்றல்லவா!
|
|
|
சமூகப்பொறுப்பா? அப்படியென்றால் என்ன அம்மா?
|
| சமுதாய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தரும் செயல்களைச் சமூகப்பொறுப்பு என்கிறோம். |
|
 |
ஓ! புரிந்துகொண்டேன் அம்மா. |
 |
அம்மா, அங்கே பாருங்கள். சாலையில் செல்லும் வண்டிகள் எல்லாம் அந்தப் பெரிய வண்டிக்கு ஏன் வழிவிடுகின்றன? |
|
 |
| அது அவசரகால ஊர்தி. உயிர் காக்கும் செயலில் அது ஈடுபடுவதால், அந்த ஊர்திக்கு முதலில் வழிவிடவேண்டும். அதுவும் சமூகப்பொறுப்பே.
|
|
(இருவரும் கடைக்குச் சென்று எழுதுபொருள்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புகின்றனர்.)
|
அம்மா, அங்கே குப்பை கொட்டும் இடத்தில் ஏன் இரண்டு பெட்டியை வைத்திருக்கிறார்கள்?
|
| மட்கும் பொருளைப் போடுவதற்காக ஒரு பெட்டியும் மட்காத பொருளைப் போடுவதற்காக இன்னொரு பெட்டியும் வைத்திருக்கிறார்கள்.
|
|
|
மட்கும் பொருள், மட்காத பொருள் அப்படியென்றால் என்ன அம்மா?
|
| மண்ணோடு மண்ணாக மட்கிப் போனால், அவை மட்கும் பொருள்கள். அவ்வாறு ஆகாதவை எல்லாம் மட்காத பொருள்கள்.
|
|
|
எவையெல்லாம் மட்கும் மட்காப் பொருள்கள் அம்மா?
|
| காய்கறிக்கழிவு, அழுகிய பழங்கள் போன்றவை மட்கும் பொருள்கள். நெகிழியாலான பொருள்கள் எல்லாம் மட்காத பொருள்கள்.
|
|
(அம்மா, அருகிலிருக்கும் பனிக்கூழ் கடைக்குக் கமலியை அழைத்துச் செல்கிறார். இருவரும் பனிக்கூழ் சாப்பிடுகின்றனர்.)
| கமலி, நெகிழியையும் குச்சியையும் குப்பைத் தொட்டியில் போடு. நாமே சுற்றுச்சூழலை மாசுபடுத்தலாமா?
|
|
|
இதோ, உடனே செய்கிறேன். இன்று உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இனி, நானும் சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்வேன் அம்மா.
|
பொருள் அறிவோம்
|
1. |
பதாகை |
- |
விளம்பரத் தட்டி |
|
|
2. |
ஊர்வலம் |
- |
ஊரைச்சுற்றி வருதல் |
|
|
3. |
ஊர்தி |
- |
வண்டி |
|
|
4. |
மாசடைதல் |
- |
தூய்மை இழத்தல் |
|
|
5. |
பனிக்கூழ் |
- |
ஐஸ்கிரீம் |
|