ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
6.5 கேட்டல் கருத்தறிதல்

குலுக்கல் பரிசு

முதியவர் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு இதயநோய் இருந்ததால், அதிர்ச்சி தரும் எந்தச் செய்தியையும் சொல்லக்கூடாது என மருத்துவர் கூறியிருந்தார். சில நாளுக்குப் பிறகு, முதியவரின் மகன் மருத்துவரைத் தேடி வந்தான். என் தந்தை வாங்கிய குலுக்கல் சீட்டில் முதற்பரிசு விழுந்திருக்கிறது. அவரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை என்றான். மருத்துவர் தாம் பக்குவமாக எடுத்துக்கூறுவதாக உறுதி அளித்தார். மறுநாள் மருத்துவர், முதியவரிடம் எப்போதும்போல பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் இடையே உங்களுக்குக் குலுக்கல் சீட்டில் ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அந்த முதியவர் சிரித்துக்கொண்டே அந்தத் தொகையில் பாதித்தொகையை உங்களுக்குத் தந்துவிடுவேன் என்றார். இப்போது மயங்கி விழுந்தவர் அந்த முதியவர் அல்லர்; மருத்துவர். பாவம், அவரால் அதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை.

வினாக்கள்

முதியவர் இதயநோயால் துன்பப்பட்டார்.

முதியவரின் மகன் மருத்துவரிடம் தனது தந்தைக்கு குலுக்கல் சீட்டில் முதற்பரிசு விழுந்திருக்கிறது என்று கூறினார்.

ஒரு கோடி

குலுக்கல் பரிசில் பாதி தொகையினை முதியவர் மருத்துவருக்குத் தருவதாகக் கூறினார்.

பரிசில் பாதித்தொகையைத் தருவதாகக் கூறிய முதியவரின் சொல்லைக் கேட்டு மருத்துவர் மயங்கி விழுந்தார்.

தகவல்துளி

வதமிழகச் சமூகச்சீர்திருத்தவாதிகளுள் முதன்மையானவர் தந்தை பெரியார். சமூகச் சீர்திருத்தத்தைத் தம் வாழ்நாள் இலக்காகக்கொண்டு வாழ்ந்தார்; சமூகத்தில் மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளை ஒழிக்கப் பாடுபட்டார். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இழிவுபடுத்தும் செயல்களை எதிர்த்தார்; மனிதநேயத்தை வலியுறுத்தினார். சமூகத்தில் பெண்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தந்தை பெரியார்