ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
7.5 கேட்டல் கருத்தறிதல்

கிரேட்டா துன்பர்க்

ஸ்வீடன் நாட்டின் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் (Greta Thunkerg). இவர், ‘பருவநிலை காக்கப் பள்ளி வேலைநிறுத்தம்’ (School Strike for the Climate) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தார். ‘எதிர்காலத்திற்கான வெள்ளி’ (Fridays for Future) என்னும் ஹேஸ்டேக் (Hashtag) உருவாக்கி உலகம் முழுவதும் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்துப் பேசினார். தற்போது, பல நகரங்களுக்குச் சென்று பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

வினாக்கள்

கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg)

பருவநிலை காக்கப் பள்ளி வேலைநிறுத்தம் (School Strike for the Climate)

எதிர்காலத்திற்கான வெள்ளி (Fridays for Future)

ஐக்கிய நாடுகள் சபையில் கிரேட்டா துன்பர்க் பருவநிலை மாற்றம் என்பது குறித்து பேசினார்.

கிரேட்டா துன்பர்க் தற்போது, பல நகரங்களுக்குச் சென்று பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.