ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
8.3 தெரிந்து கொள்வோம்

நிறுத்தற்குறிகள்

இராமு : சோமு ஏன் இப்படிப் பஞ்சாகப் பறக்கிறாய்?
சோமு : நேற்று ஆசிரியர் நடத்திய பாடத்தினைப் படிக்க வேண்டும். அதற்குப் புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
இராமு : ஆமாம், ஆமாம் நானும் முடிக்க வேண்டும்.
அப்பா : அருண், அடுத்த ஆண்டு பள்ளிச் சுற்றுலாவில் கலந்துகொள்.
அருண் : ஒவ்வொரு முறையும் நீங்கள் இப்படித்தான் தட்டிக் கழிக்கிறீர்கள்.
அப்பா : அடுத்தமுறை கட்டாயம் அனுப்புவேன். வருத்தப்படாதே.
அம்மா : இனியா, என்ன வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு இருக்கிறாய். வந்து படி.
இனியா : இதோ வந்துவிடுகிறேன்.
அம்மா : தேர்வுக்குப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் வா!
பஞ்சாகப் பறத்தல் - அலைந்து திரிதல்
தட்டிக் கழித்தல் - சாக்குபோக்கு சொல்லுதல்
வெட்டிப்பேச்சு - வீண்பேச்சு / பயனற்ற பேச்சு