ழகரம்
(முதல் பருவம்)
டாக்டர் சலீம் அலி, இயற்கை ஆர்வலர்களுள் குறிப்பிடத்தக்கவர். பறவைகள் பற்றி அறிந்துகொள்வதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. சலீம் அலியின் ஆர்வத்தை அவருடைய சித்தப்பா அறிந்துகொண்டார். அப்போது அவர், பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் சிறப்புச் செயலராக இருந்த மில்லர்ட் என்பவரிடம் சலீம் அலியை அறிமுகப்படுத்தினார். மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களைக் கற்றறிந்து கொண்டார். அந்நாள் முதல், சலீம் அலிக்குப் பறவைகள்மீது தீராப் பற்று ஏற்பட்டது. நாளடைவில் மக்கள் அனைவரும் அவரை, “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்று அழைக்கத் தொடங்கினர். இந்திய அரசு அவரது செயல்களைப் பாராட்டி, அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
பறவையினம்
பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் சிறப்புச் செயலாளர் மில்லர்ட்.
சலீம் அலி, மில்லர்ட்டிடம் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படி பாதுகாப்பது போன்ற விவரங்களைக் கற்றுக்கொண்டார்.
சலீம் அலி மக்களால் “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்று அழைக்கப்பட்டார்.
இந்திய அரசு, சலீம் அலியைப் பாராட்டி, அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் திம்மக்கா. இவர், தேசிய நெடுஞ்சாலையில் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு ஏறக்குறைய 284 ஆலமரம் நட்டுப் பராமரித்துள்ளார். இப்பணிக்காக இவருக்கு இந்திய அரசு ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கியுள்ளது. இம்மரங்களைப் பராமரிக்கும் பொறுப்பைக் கர்நாடக அரசே ஏற்றுக்கொண்டது. ’சாலமருத’ என்ற சொல்லிற்குச் சாலையின் இருபக்கங்களிலும் மரம் நட்டவர் என்று பொருள். இப்பொருள்பட திம்மக்கா தற்போது சாலமருத திம்மக்கா என அழைக்கப்படுகிறார். |
திம்மக்கா |