ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
விடை காண்போம்

பாரதியும் ஷெல்லியும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றம் குறித்து சிந்தித்துள்ளனர். தங்களை மக்களிடத்தில் ஏழைகளின் நண்பர்களாகவே அறிமுகம் செய்துகொண்டனர். அனைத்து மக்களையும் சமமாக மதிக்க வேண்டும். அனைவரும் சமமாக வாழ வேண்டும். அனைவருக்கும் அனைத்து வளங்களும் உரிமைகளும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

”யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே வாழ்தல்”

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: எதிர்மறைப் பொருளில் வரும் எச்சச்சொல் ஆகும். இறுதி எழுத்து விடுபட்டிருக்கும்.

எடுத்துக்காட்டு: கல்வியே அழியாச் செல்வம் என்றார் ஆசிரியர்;

மீனா செல்லாக் காசைக் கொடுத்தாள்.

ஒரே பொருள் தரும் இரு சொல் இணைந்து வருவது நேரிணை மொழி எனப்படும்.

எ.கா: கண்ணன் தேர்வுக்காகக் கண்ணும்கருத்துமாய்ப் படித்தான்.

ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு சொல் இணைந்து வருவது எதிரிணை மொழி எனப்படும்.

எ.கா: விளையாட்டுப் போட்டியில் வெற்றியும் தோல்வியும் ஏற்படுவது இயல்பானது.

வன்காரி மாத்தாய் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட வறுமையை ஒழிக்க, “பசுமைப் பட்டை” என்ற இயக்கத்தைத் தொடங்கி பெண்களின் உதவியுடன் முப்பது ஆண்டில் மூன்று கோடி மரம் நட்டு ஆப்பிரிக்கக் காடுகளை மீட்டெடுத்தார். இதனால் இவர் ‘மரங்களின் தாய்’ என்று அழைக்கப்பட்டார். இவர் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார்.