ழகரம்
(முதல் பருவம்)
ஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் கல்வி கற்க மாணவர்கள் வருவார்கள். அவ்வவாறு வரும் மாணவர்களிடம் ஞானி ஒரு தேர்வு வைப்பார். அதாவது, அருகிலிருக்கும் குளத்தைப் பார்த்துவிட்டு வரச்சொல்வார். அங்கே என்ன பார்த்தாய் என்று கேட்பார். அவர்கள் சொல்லும் விடையைக் கொண்டே, அவர்களைத் தம் மாணவர்களாக ஏற்றுக் கொள்வார். தாம் எதிர்பார்க்கும் விடையைக் கூறாதவர்களைத் திருப்பி அனுப்பிவிடுவார். இவரது செயலைக் கண்ட நண்பர், நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்டு, எப்படி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த ஞானி, குளத்தில் மீன்கள் துள்ளுகின்றன என்று சொல்பவனை என் மாணவனாக ஏற்றுக்கொள்கிறேன். அதில் என் உருவம் தெரிந்தது என்று சொல்பவனை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில், அப்படிப்பட்டவன் தான் என்னும் எண்ணம் உடையவன். அவனுக்கு ஞானத்தை ஊட்டமுடியாது என்று விடையளித்தார்.
மாணவர்கள் கல்வி கற்க ஞானியிடம் செல்வார்கள்.
ஞானி, மாணவரைத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறார்.
ஞானி, மாணவர்களிடம் அருகில் இருக்கும் குளத்தில் என்ன பார்த்தாய்? என்று கேட்பார்.
ஞானி, நண்பனிடம் ’குளத்தில் மீன்கள் துள்ளுகின்றன’, என்று சொல்பவனை மாணவனாக ஏற்றுக்கொள்வேன்; அதில் என் உருவம் தெரிந்தது என்று சொல்பவனை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் அவன், தான் என்னும் எண்ணம் உடையவன். அவனுக்கு ஞானத்தை ஊட்டமுடியாது என்று விடையளித்தார்.
மாணவர்களிடம் ’தான் என்னும் எண்ணம்’ இருக்கக் கூடாது என்று உரைப்பகுதி குறிப்பிடுகிறது.
மருத்துவர் முத்துலட்சுமி, தமிழகத்தின் புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் என்ற ஊரில் பிறந்தார். பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட சூழலில், சமூகத் தடைகளை முறியடித்துக் கல்வி பயின்றார். தம் தந்தையின் ஊக்கத்தாலும், நற்சிந்தனையாளர் சிலரின் உதவியாலும் கல்வி கற்று, நாட்டின் முதல் பெண் மருத்துவரானார். |
மருத்துவர் முத்துலட்சுமி |