ழகரம்
(முதல் பருவம்)
பின்வரும் உரையாடலில் வண்ணத்திலுள்ள சொற்கள் யாவும் பேசினார் என்னும் பொருளையே தருவதைப் படித்து மகிழுங்கள்
| ஆசிரியர் | : | அனைவருக்கும் வணக்கம்! | |
| மாணவர்கள் | : | வணக்கம் ஐயா | |
| ஆசிரியர் | : | நேற்று கல்வி அமைச்சர் தொலைக்காட்சியில் பேசினார். அனைவரும் கேட்டீர்களா? | |
| மாணவர்கள் | : | ஆம் ஐயா. கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து அருமையாகக் கூறினார். | |
| ஆசிரியர் | : | மிக எளிமையாகவும் நன்கு புரிந்துகொள்ளும் படியும் எடுத்துச் சொன்னார். | |
| கண்மணி | : | நாள்தோறும் நூலகம் செல்லும் பழக்கம் வேண்டும் என்று கூடப் பகிர்ந்தார். | |
| குறளரசன் | : | உடற்பயிற்சிக்கு முதன்மை அளிக்கவேண்டும் என்று உரைத்தார். | |
| இனியன் | : | அதுமட்டுமா, மனப்பயிற்சிக்கும் இடம்தர வேண்டுமென இயம்பினார். | |
| ஆசிரியர் | : | ஆம். உடல், உள்ளம் இரண்டுமே நமது கண்கள் என்று விளம்பினார் அல்லவா! | |
| செழியன் | : | நாள்தோறும் நூலகம் செல்லும் பழக்கம் வேண்டும் என்று கூடப் பகிர்ந்தார். | |
| ஆசிரியர் | : | அருமை! அருமை! அமைச்சர் நவின்ற கருத்துகளை அனைவரும் நன்கு புரிந்து கொண்டுள்ளீர்கள். அவற்றை நாமும் பின்பற்றுவோம். |
| பல சொல் | ஒரு பொருள் |
| ஊண், ஆகாரம், அடிசில், உண்டி | உணவு |
| நாசம், அழிவு, சிதைவு, சேதம் | கேடு |
| அணிதல், சூடுதல், புனைதல், அலங்கரித்தல் | தரித்தல் |
| ஓசை, சத்தம், அரவம் | ஒலி |
| பகலவன், கதிரவன், இரவி, பரிதி, ஆதவன் | சூரியன் |
| உடம்பு, மேனி, மெய், சரீரம் | உடல் |
| தூக்கம், துயில், அனந்தல், சயனம் | உறக்கம் |
| பா, கவிதை, யாப்பு | செய்யுள் |
| பரி, மா, அசுவம், புரவி, கலிமா | குதிரை |
| பதம், மொழி, கிளவி | சொல் |
| மங்கை, நங்கை, வனிதை | பெண் |
| மாசு, குற்றம், பிழை | தவறு |
| பாசம், பரிவு, ஈரம், பற்று, கருணை, நேசம் | அன்பு |
| வனப்பு, பொலிவு, எழில், வடிவு, அணி | அழகு |
| கோ, கொற்றவன், காவலன், வேந்தன், மன்னன், இராஜா, கோன் | அரசன் |
| கணை, சரம், பாணம், வாளி, அஸ்திரம் | அம்பு |
| அல்லல், துயர், இடர், இடும்பை, இன்னல் | துன்பம் |
| சிங்கம், திருமால், அரிதல் | அரிமா |
| இன்பம், களிப்பு, ஆனந்தம் | மகிழ்ச்சி |
| மதி, விவேகம், ஞானம், உணர்வு, மேதை, உரம் | அறிவு |