ழகரம்
(முதல் பருவம்)
சென்னைப் புத்தகக் கண்காட்சி
700 அரங்குகள்
செயின் ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி
புத்தகங்களின் விலையிலிருந்து 10 சதவீதம் குறைக்கப்படும்.
செப்டம்பர் 6 முதல் 19 வரை
| அரிஸ்டாடில் வாழ்வில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு சுவாரசியமான நிகழ்வு. ஒருமுறை அரிஸ்டாட்டில் தம் மாணவர்களை மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். அவர், முன்னே செல்ல, மாணவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். அவரின் மாணவராகிய அலெக்சாண்டரும் உடன் சென்றார். வழியில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து வரத்தொடங்கியது. இதனைப் பார்த்த அலெக்சாண்டர், அரிஸ்டாட்டிலின் முன்பாக வந்து நின்றார். அரிஸ்டாட்டிலோ, காட்டாற்று வெள்ளம் அதிகமாக இருப்பதால் அலெக்சாண்டரைப் பின்னால் செல்லுமாறு கூறினார். அதற்கு அலெக்சாண்டர் தம் ஆசிரியரிடம், ‘நீங்கள் நினைத்தால் ஆயிரம் அலெக்சாண்டர்களை உருவாக்க முடியும். ஆனால், உங்களைப் போன்ற ஆசிரியரை எங்களால் உருவாக்க முடியாது’ என்று கூறி வெள்ளப்பகுதியிலிருந்து ஆசிரியரான அரிஸ்டாட்டிலையும் தள்ளி நிற்க வைத்தார். இந்நிகழ்வு, தம் ஆசிரியர்மீது அலெக்சசாண்டருக்கு இருந்த மதிப்பபை உணர்த்துகிறது. |
|