ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

- (குறள் : 1033)

- திருவள்ளுவர்

பொருள்:

உழவுத் தொழில் செய்து வாழ்பவர்களே வாழ்பவர்கள் ஆவர். மற்ற தொழில் செய்பவர்கள் எல்லாம் உழவுத் தொழில் செய்பவர்களை வணங்கி, அவர்களின் பின்னால் செல்பவர்கள் ஆவர்.

பழமொழி

மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.

சொல்வதைக் கேட்டு எழுதுக

தொழிற்புரட்சியினால் ஏராளமான நன்மைகள் ஏற்பட்டன. பெரிய ஆலைகள் அமைக்கப்பட்டதால், பொருள் உற்பத்தி அதிகரித்தது. அதிக எண்ணிக்கையிலும் விலை மலிவாகவும் விரைவாகவும் பொருள்கள் தயாரிக்கப்பட்டன.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. முன்னேற்றம்
  2. மாறுதல்
  3. பங்களிப்பு