ழகரம்
(முதல் பருவம்)
இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
இயந்திரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடு வீரே!
பெரும்புகழ் நுமக்கே இசைக் கின்றேன்
- மகாகவி பாரதியார்
இந்தப் பாடல் தொழிலை மையப்படுத்தியுள்ளது.
உலகம்.
ஆயிரம் தொழில் செய்வதாகப் பாடல் குறிப்பிடுகிறது.
இரும்பைக் காய்ச்சி உருக்கலாம்.
உருக்கிடுவீரே, வகுத்திடுவீரே, பிழிந்திடுவீரே, முத்தெடுப்பீரே, செய்திடுவீரே போன்றன ஒரே ஓசையுடைய சொற்கள் ஆகும்.
தொழில் முனைவோராக ஆவதற்கு வயது ஒரு தடையில்லை என மெய்ப்பித்தார் ஒருவர். தமது அறுபத்து ஐந்தாவது வயதில் தமக்கு நன்கு தெரிந்த கோழிக்கறி வறுவல் விற்பனையைத் தொடங்க எண்ணினார். தம் பொருளை வாங்குமாறு கடை கடையாக ஏறி இறங்கினார். யாரும் இவரின் கோரிக்கையை ஏற்கத் தயாராக இல்லை. இறுதியில் ஒரு நிறுவனம் இவருக்கு ஆதரவளித்தது. தனது கோழிக்கறி வறுவலுக்கு KFC (Kentucky Fried Chicken) எனப் பெயரிட்டார். விற்பனை அதிகரித்தது. ஒன்பது ஆண்டில் KFC மிகப்பெரும் வெற்றி கண்டது. அவர்தாம் KFC உணவகத்தின் நிறுவனர் கர்னல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ் (Colonel Harland Sanders). |
![]() (Colonel Harland Sanders) |