திருக்குறள்
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
- (குறள்: 672)
- திருவள்ளுவர்
(வினை – செயல்)
பொருள்:
காலம் தாழ்த்திச் செய்யக்கூடிய செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்க. ஆனால், காலம் தாழ்த்தாமல் செய்யக்கூடிய செயல்களை விரைந்து செய்க.
பழமொழி
காய்த்த மரந்தான் கல் அடிபடும்.
சொல்வதைக் கேட்டு எழுதுக
- தன்னம்பிக்கை உடையவர் வெற்றி பெறுவார்.
- உழைப்பால் உயர்ந்தோர் பலர் உள்ளனர்.
- தொழில் முனைவதற்கு முயற்சியும் முதலீடும் தேவை.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக
- வெற்றி
- பாதுகாப்பு
- முயற்சி