ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.5 கேட்டல் கருத்தறிதல்

வள்ளுவர் கோட்டம்

உலக மக்கள் அனைவருக்கும் ஏற்புடைய அறக்கருத்துகளை வழங்கும் உயரிய நூல் திருக்குறள். இந்நூலை இயற்றிய திருவள்ளுவரின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில், வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ளது. தேர் வடிவத்திலுள்ள இக்கோட்டம் யானைகள் இழுத்துச் செல்வதுபோலக் கருங்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்பகுதி 25 அடி நீளமும் 25 அடி அகலமும் உடையது. தேரின் மையத்தில் எண்கோண வடிவக் கருவறை உள்ளது. இக்கருவறையில் திருவள்ளுவரின் சிலை அழகாக அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

வினாக்கள்

வள்ளுவர் கோட்டம் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

திருவள்ளுவரின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில், வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டம் சென்னையில் அமைந்துள்ளது.

உலக மக்கள் அனைவருக்கும் ஏற்புடைய அறக்கருத்துகளை வழங்குவதால் திருக்குறளை நாம் உயரிய நூல் என்கிறோம்.